மேலும் அறிய
Tamilnadu Roundup: அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சி... தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! ஆர்சிபி த்ரில் வெற்றி
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- "அதிமுக - பாஜக கட்சிகள் மகிழ்ச்சியுடன் அமைத்த கூட்டணி இது" சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- மழை வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு பல்வேறு மூலிகைகள் மற்றும் பன்னீர் கொண்டு நடைபெற்ற தாராபிஷேகம் - பக்தர்கள் வழிபாடு.
- திருத்துறைப்பூண்டி அருக ஆம்னி வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி
- பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பாங்களா? அப்படித்தான் ஆளுநர் விவகாரமும்..."-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- கொடைக்கானல் தாண்டிக்குடியில் ரசிகர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்
- கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது
- தாராபுரம் அருகே சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து கணவன் - மனைவி பலி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது விபத்து, பெற்றோர் உயிரிழந்த நிலையில் குழிக்குள் விடிய விடிய கத்திய சிறுமி
- தமிழகத்தில் இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் வரும் மே 28-ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை
- காரைக்கால் அம்மையார் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
- உதகையில் கோடை விழா தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















