TN Headlines: “மா மதுரை” விழா:தொடங்கி வைத்த முதல்வர், பொறியியல் மாணவர்களின் விவரங்கள் கசிவு: இதுவரை..!
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
“மா மதுரை” விழா: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் "மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று மா மதுரை விழாவை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் இன்று ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா” நடைபெற உள்ளது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா, அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும் அமைக்கப்பட்டுளளன. ஏற்கனவே மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை cii & யங் இந்தியன் குழுவினர் வழங்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
TNEA Students Data Leak: அதிர்ச்சி… பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிவு- பின்னணி என்ன?
அடுத்தடுத்த சுற்றுகளில் சேர விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் விவரங்கள் மொபைல் எண்களுடன் வெளியாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்; நீர்வரத்து 2வது நாளாக 10,000 கன அடியாக நீட்டிப்பு
மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைந்துள்ளது.
'பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள்
செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்த அரசு தலைமை ஆசிரியை
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பள்ளி செல்லாத வட மாநில தொழிலாளர்களின் 10 குழந்தைகள் உட்பட 20 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களை கடிக்க துவங்கும் நாய்கள் - பீதியில் மக்கள்...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தெருநாய் கடிகள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு, பணங்தோப்பு தெரு, மற்றும் டபீர்தெரு, தோப்பு தெரு, சிவப்பிரியாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெரு நாய்கள் மனிதர்கள் ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கடித்து வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.