TN Headlines: உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை- உச்சநீதிமன்றம்: வால்பாறையில் நிலச்சரிவு அபாயம்: இதுவரை இன்று..
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை - 7 நீதிபதிகள் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கி கருணாநிதி ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, பேலா திரிவேதி, காவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்
காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு... டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்தும் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
வால்பாறையில் நிலச்சரிவு அபாயம் உள்ள 305 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு இடமாற்றம்
பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மிக மிக கனமழை பெய்யும் எனவும், 20 செ.மீ.க்கு மேல் மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Thagaisal Thamizhar Award: தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு;
அரசு அறிவிப்பு குமரி அனந்தனைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. தகைசால் தமிழர் விருதிற்கு, விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு விருது வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுதான் ஜாமினில் வெளியே வந்தார்! அதுக்குள்ள மீண்டும் சிறையா? - எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு புது சிக்கல்!
ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கரூரில் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.