TN Headlines:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா.. ஆக.13ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய செய்திகள்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Aadi Pooram 2024: இன்று ஆடிப்பூரம்! அம்மனுக்கு வளைகாப்பு, திருக்கல்யாணம் - குவியும் பக்தர்கள்!
இன்று (07.08.2024) ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது. மேலும், உமையாள் தேவி தோன்றிய நாளும் இதே ஆடிப்பூர நாள் என்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் வளைகாப்பு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா- கோவிந்தா கோபாலா பக்தி கோஷங்கள் முழங்க தேரோட்டம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார நாளான இன்று (07.08.2024) காலை 9:05 மணிக்கு திருஆடிப்பூர தேரோட்டம் தொடங்கியது. 'கோவிந்தா கோபாலா' கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் விரதமிருந்து ஆடிப்பூர தினத்தன்று சிறப்பு வழிபாடு செய்தனர். திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான பொறியாளர், வரைவு அலுவலர்கள்; 4 மாதமாக வழங்கப்படாத பணி நியமனம்- எழும் கேள்விகள்
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர், வரைவு அலுவலர்களுக்கு 120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ‘’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு இளநிலைப் பொறியாளர்கள் 49 பேர், இளநிலை வரைவு அலுவலர்கள் 49 பேர் என மொத்தம் 98 பேர் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு 120 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்லும் முன் அமைச்சரவைக் கூட்டம்! ஆக.13ல் முதல்வர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு! அமைச்சர்களுக்கு ட்விஸ்ட்!
ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில், ஆக.13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. . முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் சுமார் 15 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. தலைமை செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் முதலமைச்சர் உடன் செல்ல உள்ளனர். பல்வேறு தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிர்வாகிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆக.13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் யாரேனும் மாற்றப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
'ஊர் ஊராக போய் பாட்டு பாடி, நாடகம் போட்டு விழிப்புணர்வு பண்ணோம்' - அதிகாரிங்க எங்களை ஏமாத்திட்டாங்க
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம் ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பர் என சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், பிளாஸ்டிக் பயன்பாடு, திறந்தவெளியில் மலம் கழிக்காமல், கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கிராமிய கலை குழுவினருக்கு, கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும, 5 கிராமிய கலை குழுக்கள் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.போதிய வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு மதிப்பு புதிய வழங்கப்படவில்லை. தங்களுக்கு வழங்கக் கூடிய மதிப்பூதியம் வழங்கவில்லை என்றால், கிராமிய கலைஞர்கள் ஒன்றிணைந்து பிச்சை எடுக்குய் போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என தெரிவித்தனர்.
சரிந்த நீர்வரத்து; குறைக்கப்பட்ட நீர் திறப்பு: மேட்டூர் அணையின் முழு நிலவரம் இங்கே!
கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 73,330 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைந்துள்ளது.