மேலும் அறிய
Tamilnadu Roundup: மீண்டும் வீழ்ந்த தங்கம் விலை, தமிழ்நாடு புதிய உச்சம், தர்பூசணி சர்ச்சை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- 2024-25ம் ஆண்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (9.69%) தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல்
- பாம்பன் பாலத்தை திறக்க ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளதை ஒட்டி சுமார் 3,500 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!
- தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து, ரூ.66,480க்கும் கிராம் ரூ.8,310க்கும் விற்பனை
- திருப்பூரில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெய்த கன மழையால், அறிவொளி நகர் பகுதியை சூழ்ந்த மழை நீர் - மக்கள் அவதி.
- "கேள்விக்குறியாக இருந்த அதிமுகவை ஆச்சரியக் குறியாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி!" -அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
- தர்பூசணி தரம் தொடர்பான ஆய்வால் சர்ச்சையில் சிக்கிய சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்
- பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மதுபோதையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய 6 பேர் கைது
- நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.
- குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
- திருப்பூர்: அய்யம்பாளையத்தில் செயல்பட்டு வரும் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம்.
- சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற தேர் திருவிழா.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















