ஓட்டுநர் உரிமம் ரத்து? புதிய விதிகள் சொல்வது என்ன?
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது இ-செல்லான் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது.
சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்வது, மோசமாக வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அபராதச் சீட்டு வழங்கப்படும்.
இதில் போக்குவரத்து கேமராக்களுக்கான குறைந்தபட்ச விவரக்குறிப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள அபராதங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு மாதாந்திர எச்சரிக்கைகள் ஆகியவை அடங்கும்.
ஒரு நிதியாண்டில் மூன்று இ- செல்லான்கள் வழங்கப்பட்டால், அதாவது மூன்று முறை விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படுமாம்..
போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.