மேலும் அறிய
Tamilnadu Roundup: பயோமெட்ரிக் கட்டாயம்! திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா.. கடைசி இடத்தில் சிஎஸ்கே பரபர 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : ABP Live
- திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியுள்ளது தொழில்துறை
- குடியரசுத் தலைவர், ஆளுநர் மூலம் மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்ற அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை-முதல்வர் ஸ்டாலின்
- உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு
- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வழிப்பறி வழக்கில், போலீசார் பிடியில் இருந்து தப்பமுயன்ற ரவுடிக்கு கைமுறிவு
- சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று(ஏப்-20) முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம்
- 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
- ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு, 5 பேர் காயம்
- 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
- சென்னை கேகேதிருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா நகரில் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
- ஹெல்மெட் அணியாத போலீசாரை சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுத்த கமிஷ்னர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார் டிஜிபி சங்கர் ஜிவால்
- கடலூர் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், பைக்கை ஓட்டிச்சென்ற நேரு என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த சோகம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















