மேலும் அறிய
Tamilnadu roundup: ட்விஸ்ட் வைத்த எடப்பாடி! இன்று அமைச்சரவை கூட்டம்.. தலைசுற்ற வைக்கும் தங்கவிலை- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- தீரன் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
- சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் 22 மாதங்களுக்குப் பின் இன்று(ஏப்.17) திறப்பு
- 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு, ஒரு கிராம் ரூ-8920-க்கும்,ஒரு சவரன் 71,360-க்கும் விற்கப்படுகிறது
- மேல்பாதி திரவுபதி கோவில் மீண்டும் மூடல்.. வழிபாடு நடத்த எதிர்ப்பு.. திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது..
- "விஜய்யை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம்" - அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர்
- கடலூர் அருகே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய கார் தீ பற்றி எரிந்து விபத்து
- ஹஜ் பயணம் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- "பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்" அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை






















