மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை, உணவால் ரூ.1.5 கோடி வருவாய் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது
- சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது நாளாக நேரலையில் காட்டப்படவில்லை
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது
- சென்னை உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய்: உதயநிதி ஸ்டாலின்
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு நாளை தொடங்குகிறது - போதிய அவகாசம் இல்லை என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென மனு
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கம் வீட்டில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை
- ராணிப்பேட்டை அருகே லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில், லாரி ஓட்டுனர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் - 30 பேர் காயம்
- பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை
- உரிய அனுமதியின்றி, தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா பேருந்து திருமலையாம்பாளையம் அருகே சிறை பிடிப்பு. கேரளா பேருந்து உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம் விதிப்பு
- போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக, வண்ணாரப்பேட்டை காவல்நிலையை காவலர் அருண் பாண்டியன் கைது
- கோவையில் பீஃப் பிரியாணி விற்பனை செய்யக்கூடாது என தள்ளுவண்டி வியாபாரியை மிரட்டிய பாஜக பிரமுகர் சுப்பிரமணி, தன் செயலுக்கு சர்ச்சை விளக்கம்
- அம்பத்தூர்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து - டீ அருந்த சென்றதால் ஓட்டுனார் உயிர் தப்பினார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion