மேலும் அறிய
Tamilnadu Headlines: ஏவிஎம் சரவணன் காலமானார்.. டாட்டா சொன்ன டிட்வா.. தொடங்கிய தேர்தல் பணிகள்
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், AVM நிறுவன இயக்குநருமான சரவணன் (86) உடல்நலக்குறைவால் காலமானார்.
- சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம். ஒரு தொகுதிக்கு குறைந்தது 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திருப்பரங்குன்றம் மலையில் மரபுப்படி கார்த்திகை தீபம் ஏற்றம். தடுப்புகளை உடைத்து எறிந்து இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை.
- இந்து மக்கள் கட்சியினர் திருப்பரங்குன்றத்தில் இருந்து கலைந்து சென்ற நிலையில், நீதிபதி சுவாமிநாதன் உத்தரவின்படி அங்கு வந்த CISF படையினரும் புறப்பட்டனர்
- சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- திருப்பரங்குன்றத்தில் நேற்று வன்முறை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டதை அடுத்து, பழனி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் பாதை மூடல்.
போலீசார் தடை விதித்துள்ள நிலையிலும், வெளியூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணமாக உள்ளனர். - திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோயில் சாலை, தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. போலீசாருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement






















