மேலும் அறிய
Tamilnadu Roundup: விஜய்-ஓய்வு பெற்ற நீதிபதி பரபரப்பு கருத்து, மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது. மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நேற்று கைதான நிலையில் இன்று மேலும் ஒரு நிர்வாகி கைது.
- பேருந்தின் மீது நின்றபடி விஜய் வழிநெடுக கையசைத்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பரபரப்பு கருத்து.
- கரூர் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது.
- கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட 3 பேரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
- விசாரணை தொடங்கும் முன்பே, என்ன நடந்தது என தெரிவதற்கு முன்பே அண்ணாமலை போன்றவர்கள் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்ததாக திருமாவளவன் எம்.பி விமர்சனம்.
- கலவரத்தை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் திவிட்டு பின்னர் அதை நீக்கிய ஆதவ் அர்ஜுனா. இலங்கை, நேபாளம் போன்ற சூழல் தமிழ்நாட்டில் வர வேண்டும் என பதிவிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு கிராம் 10,860 ரூபாய்க்கும், ஒரு சவரன் 86,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை இரு மடங்காக உயர்வு. மல்லிகைப்பூ தற்போது ரூ.1,700 வரை விற்பனை.
- சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிவித்துவந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேர் கைது. மருத்துவமனைக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.
- கொடைக்கானலில் கடந்த 5 நாட்களில் 8-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















