மேலும் அறிய
Tamil Nadu Headlines(02-07-2025): அண்ணாமலை மீது வழக்கு, வட சென்னையில் குளுகுளு பேருந்து நிறுத்தங்கள், தங்கம் விலை அதிகரிப்பு - 10 மணி செய்திகள்
Tamil Nadu Headlines(02-07-2025): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
Source : ABP
- திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
- மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியது தொடர்பாக, அண்ணாமலை, இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு.
- வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க டெண்டர் கோரியது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம். பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் பகுதிகளில் வருகிறது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு. அதன்படி, ஒரு கிராம் ரூ.9,065-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் வரி விதிப்பில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.150 கோடி முறைகேடு என புகார். ஏற்கனவே 8 மாநகராட்சி ஊழியர்கள் கைதான நிலையில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம் என தகவல்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024-25-ம் நிதியாண்டில், ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளதாக ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ். குமார் தகவல்.
- தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 2.8 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல். அதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















