Tamilnadu Roundup: டெல்லி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்! மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
மன்மோகன் சிங் மரணம்; அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலுவும் டெல்லி பயணம்
மன்மோகன் சிங் மறைவு காரணமாக அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி கேட்டு நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்தது அதிமுக
மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் கலந்த பர்னஸ் ஆயில் - எண்ணெய்யை அகற்றும் பணி தீவிரம்
புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் இலவச அரிசி ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து வழங்கப்படும் - புதுச்சேரி அரிசி
வைகையில் இருந்து 46 கண்மாய்கள் நிரம்பி வீரசோழனை வந்தது தண்ணீர் - கிருதுமால் நதி நிரம்பியதால் தண்ணீர் திறப்பு
திருநெல்வேலியில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சென்னை காசிமேட்டில் வாகனத்தில் கொண்டு சென்ற எரிவாயு திடீர் கசிவு - புகைமூட்டம் பரவியதால் பொதுமக்கள் அச்சம்
ஓசூர் அருகே இரவில் உலா வரும் காட்டு யானை ; பொதுமக்கள் அச்சம் - வனத்திற்குள் விரட்ட கோரிக்கை
48வது புத்தககண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம் ; ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுத உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்