Tamilnadu Roundup 22.08.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. நெல்லை வரும் அமித்ஷா - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அதிகாலையிலே இடி, மின்னலுடன் பலத்த மழை
வளிமண்டல மேக மாறுபாடு காரணமாக சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை - துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 11 செ.மீட்டர் மழை
ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று ஓராண்டில் 1 லட்சம் புகார்கள்
சென்னைக்கு இன்று 386வது பிறந்த நாள்; நெட்டிசன்கள் வாழ்த்து
தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை; 386வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயது குழந்தை - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
உழைக்காமலே பலனைப் பெறுவதுதான் ஊழல் - எடப்பாடி பழனிசாமி
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய அமர்வு
ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரியை நீக்க அமைச்சர்கள் குழு ஒப்புதல்
மதுரையில் தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் கடும் தாக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என விமர்சித்து பேசிய விஜய்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நெல்லை வருகை - நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு செல்கிறார்





















