Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. பிறந்தது கார்த்திகை - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 11.7 செ.மீட்டர் மழை கொட்டியது
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும்
கனமழை எச்சரிக்கையால் நாகப்பட்டினத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
இன்று பிறந்தது கார்த்திகை மாதம்; சபரிமலைக்கு மாலை அணியத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
எதிர்க்கட்சிகளை முடக்க தேர்தல் ஆணையமே களமிறங்கிவிட்டது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
ராசிபுரம் கல்லூரியில் டைட்டல் பார்க் பணிகள் அமைப்பதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சாலை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
யுனிசெஃப் தூதராக இணைவதில் நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
திருவண்ணாமலையில் சாலையில் கவிழ்ந்த டீசல் லாரி; பாத்திரங்களில் பிடித்துச் சென்ற மக்கள்
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சம்
ஊட்டியில் ஒரே இடத்தில் தென்பட்ட 3 புலிகள் - பொதுமக்கள் அச்சம்





















