மேலும் அறிய
Tamilnadu Roundup: மழைக்கு வாய்ப்பு! கரூர் அருகே பயங்கர விபத்து.. தொடரும் அமலாக்கத்துறை சோதனை - 10 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை கண்டித்த நடிகர் சூரியை பாராட்டிய கவிஞர் வைரமுத்து
- ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக்கல் செஸ் தொடரில் டைபிரேக்கரில் வென்று மகுடம் சூடினார் பிரக்ஞானந்தா
- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
- தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..! - வானிலை மையம் எச்சரிக்கை
- திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட 12 இடங்களில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை
- டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக சோதனை
- சேலம் அயோத்தியாபட்டினத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஒரே மதிப்பெண் எடுத்தனர்
- கரூர் அருகே ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பலி
- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற, ஜெயங்கொண்டம் மாணவி சோஃபியாவுக்கு வீடியோ காலில் வாழ்த்து கூறிய மநீம தலைவர் கமல்ஹாசன்.
- "நீலகிரி சென்றும் கூட ஓய்வு எடுக்காமல் தினந்தோறும் மக்கள் பணி செய்தார் முதலமைச்சர்.." - சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது.
- சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் நகரில் வீட்டின் பூஜை அறையில் சாமி கும்பிடும்போது விளக்கிலிருந்த தீ சேலையில் பற்றியதில் 50% தீ காயங்களுடன் அன்பொலி (53) என்பவர் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
Advertisement
Advertisement






















