மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழகத்தில் அக். 16, 17-ல் ஆரஞ்சு அலெர்ட், 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை, ரூ.95,000-த்தை கடந்த தங்கம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 95 ஆயிரம் ரூபாயை கடந்தது. இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ரூ.95,200-க்கும், கிராமிற்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,900-க்கும் விற்பனை.
- பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை.
- விசிக-விலிருந்து விஜய் கட்சிக்கு செல்பவர்கள் கொள்கையற்ற பதர்கள் என சமூக வலைதள செய்திகளை சுட்டிக்காட்டி திருமாவளவன் சாடல்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
- தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 17 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- வானிலை மையத்தின் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- தென்காசியில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி பகுதியில் பெய்துவரும் கனமழையால் தாமரபரணி ஆற்றின் கரையில் அரிப்பு. திருச்செந்தூர்-திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் தண்ணீர் தேக்கம்.
- தீபாவளி பண்டிகையை ஒட்டி விருதுநகர் தோணுகால் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை. ஒரு ஆடு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement





















