Tamilnadu Roundup: மாஸ் காட்டும் மாட்டுப் பொங்கல்! தமிழகம் முழுவதும் உழவர்கள் உற்சாகம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup 15th January 2025: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - விவசாயிகள் தங்கள் மாடுகளுக்கு அலங்காரமிட்டு பூஜை செய்து வழிபாடு
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்; போலீசார் பலத்த பாதுகாப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 மாடுகளைப் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசு
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்; பரப்புரையைத் தொடங்கிய தி.மு.க.
சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன்; லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்
பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழாவில் திசை மாறிப் பறந்த பலூன்கள்; கேரளாவில் தரையிறங்கியபோது சிக்கிக் கொண்ட சிறுமிகள் பத்திரமாக மீட்பு
உதகையில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; படுகர், தோடர், பழங்குடியினர் மக்கள் உற்சாக நடனம்
பட்டுக்கோட்டை அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பகல் தரிசனம் நடக்கும் கோயில்; பொங்கல் நாளில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
தமிழ்நாட்டில் நாளை காணும் பொங்கல் பண்டிகை என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்ட போலீசார்
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிப்பு