மேலும் அறிய
Tamilnadu Round Up: SIR படிவங்களை சமர்பிக்க இன்றே கடைசி நாள்.. குற்றாலாத்தில் குவியும் மக்கள் - 10 மணி செய்திகள்
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : twitter
- ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் டிச. 23ஆம் தேதி நடைபெறுகிறது
- சபரிமலை சீசன் தொடங்கியதால் குற்றாலத்தில் இரவிலும் குவியும் ஐயப்ப பக்தர்கள்
- வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்க அமைச்சர் உத்தரவு
- பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை அளிக்க தமிழ்நாட்டில் இன்றே கடைசி நாள். வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
- அசாமில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் அதிவிரைவு ரயிலில் கோவை ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவில்லா பெட்டியில், கேட்பாரற்றுக் கிடந்த பைகளில் இருந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல்
- சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்தில் 40 பேர் காயம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
- திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டில் உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது
- சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் 3வது பாடலான ‘நமக்கான காலம்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத புள்ளி சுறா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement






















