Tamilnadu Roundup: தவெக போராட்டம்.. திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் தவெக போராட்டம் - பங்கேற்கிறார் விஜய்
திருவள்ளூரில் டீசல் ஏற்றி வந்த டேங்கர் ரயில் தீ விபத்து - பல கிலோ மீட்டருக்கு பரவிய கரும்புகை
சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் ரத்து
சென்னையில் தவெக போராட்டத்தில் விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமானோர் பங்கேற்பு - போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மதிமுக வலுவிழப்பதற்கு முக்கிய காரணம் மல்லை சத்யா - துரை வைகோ குற்றச்சாட்டு
சரக்கு ரயில் விபத்து காரணமாக திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கம்
சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை - திருவள்ளூர் ஆட்சியர்
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்திற்கு 3 பெட்டிகள் தடம்புரண்டதே காரணம் - தெற்கு ரயில்வே
சரக்கு ரயில் தீ விபத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகளுக்கு உணவு, குடிநீர் விநியோகம் - அமைச்சர் நாசர்
சென்னையில் தவெக போராட்டத்திற்கு பங்கேற்க வெளிமாவட்டத்தில் இருந்து வந்த தொண்டர்கள் கைது என தகவல்
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது
பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலையில் மரணம் - திரையுலகம் சோகம்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி





















