மேலும் அறிய
Tamilnadu Roundup : "காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது" இன்று 25 ரயில்கள் ரத்து - இதுவரை தமிழ்நாட்டில்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : twitter
- திருப்பூரில் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்!
- அரியலூர் அருகே ஆண்டிமடத்தில் சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி தீப்பற்றியதில் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு
- சென்னையில் மாநகரப் பேருந்து நடத்துநரை பழிவாங்க மதுபோதையில் பேருந்தை கடத்திச் சென்ற நபர் பிடிபட்டார்
- சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பயணிகளின் வசதிக்காக, சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
- இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் அலங்கார நினைவு வளைவை அகற்றியபோது விபத்து - ஒருவர் பலி
- "என்னை சோதிக்காதீர்கள்.. என்னை வாழவைத்தவர்கள் எம்.ஜி.ஆர்-ம், ஜெயலலிதாவும்தான்.." தான் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
- சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பதக்கங்களை குவித்த கோவையை சார்ந்த சிலம்பம் வீரர், வீராங்கனைகள்
- இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ரெட்ரோ படத்தின் முதல் பாடல்!
- சேலம் ஆத்தூர் அருகே மல்லிக்கரை அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் உடன் படிக்கும் 2 மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை.
- காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது - தமிழிசை சௌந்தரராஜன்
- ''பவதாரணி பெயரில் புதிய இசைக்குழு'' - இளையராஜா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















