Tamilnadu Roundup: குண்டுவெடிப்பு சம்பவத்தால் தமிழ்நாட்டிலும் உஷார்.. திமுக ஆர்ப்பாட்டம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

டெல்லியில் கார் வெடித்த இடத்தில் என்ஐஏ, என்எஸ்ஜி அதிகாரிகள் தீவிர சோதனை
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி - தமிழ்நாட்டில் தீவிர வாகன சோதனை
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலை
சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; கைதான 3 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் அனுமதி
சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று விசாரணை
அதிமுக-வில் இருந்து பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் இணையலாம் - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
கோவையில் வீட்டு முன்பு நின்று அச்சத்தை உண்டாக்கிய ஒற்றை யானை
திருநெல்வேலியில் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த விவசாயி வெட்டிக்கொலை
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - மத்திய அரசின் கண்காணிப்புக்குழு உத்திரவாதம்
சென்னையில் அதிகாலையில் தூய்மை பணியாளருக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞர் கைது





















