மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
- தமிழக அரசின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு
- தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை – காட்டாற்று வெள்ளத்தில் பல பகுதிகளில் தரைப்பாலங்கள் துண்டிப்பு
- நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது – நோயாளிகள் கடும் அவதி
- கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாம்சங் தொழிலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடிவு
- சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது வழக்குப்பதிவு – அனுமதியின்றி கூட்டம் கூட்டியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- சென்னை –கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில் – தொடர் விடுமுறை, பண்டிகை கொண்டாட்டம் காரணமாக தெற்கு ரயில்வே ஏற்பாடு
- ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்; தமிழ்நாட்டின் பிரபல சந்தைகளில் குவியும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் – விலை கிடுகிடு உயர்வு
- நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை
- தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டி; பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
- குலசையில் களைகட்டும் தசரா பண்டிகை; விதம் விதமாக வேடம் அணிந்து உலா வந்த பக்தர்கள்
- தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு உற்பத்தி மந்தம்; மூலப்பொருட்கள் தடையை நீக்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
- ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- தொடர் விடுமுறை காரணமாக பலரும் காலை முதலே சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion