RN Ravi: நீதித்துறையில் உள்ளூர் மொழி ஊக்குவிப்பு...-பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி !
நீதித்துறையில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
![RN Ravi: நீதித்துறையில் உள்ளூர் மொழி ஊக்குவிப்பு...-பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி ! Tamilnadu Governor RN Ravi thanks PM Modi for stressing promotion of local languages in Courts across country RN Ravi: நீதித்துறையில் உள்ளூர் மொழி ஊக்குவிப்பு...-பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/30/4e33effafc3cfddd53d826c0a1e75dc3_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது என்றும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தக் கருத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்துள்ளார். அதில், “நீதித்துறையில் உள்ளூர் மொழிகளை ஊக்குவித்ததற்காக மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மாண்புமிகு ஆளுநர் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும், அனைவருக்கும் சமநீதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சமநீதி கிடைக்கும். @PMOIndia @HMOIndia @RijijuOffice
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) April 30, 2022
முன்னதாக இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, “நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்கள் அதனுடன் இணைந்திருப்பதை உணருவார்கள். நாட்டில் சுமார் 3.5 லட்சம் கைதிகள் விசாரணைக்கு உட்பட்டு சிறையில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஏழை அல்லது சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வழக்குகளை மறுஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு உள்ளநிலையில் அவர்களை முடிந்தால் ஜாமீனில் விடுவிக்க முடியும் என்றார். மனிதாபிமான உணர்வு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து முதலமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் நான் வேண்டுகோள் விடுப்பேன்.
#JUSTIN | நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடிhttps://t.co/wupaoCQKa2 | #Court #Regional #language #RegionalLanguage pic.twitter.com/nH6WCRNhJL
— ABP Nadu (@abpnadu) April 30, 2022
நீதிமன்றங்களில், குறிப்பாக உள்ளூர் அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு தியானம் ஒரு முக்கிய கருவியாகும் . நம் சமூகத்தில், தியானம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)