உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.. முழு விவரம்..
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலோனோர் அருகில் உள்ள நாடுகளுக்கு மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதோடு, உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படும் முழு செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்திருந்தார்.

மாணவர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா விமானம் மட்டுமல்லாது, இந்திய ராணுவத்தின் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்காக மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்காக சிறப்புக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அயலக அணி செயலாளருமான எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி, திமுக அயலக அணியின் முன்னாள் செயலாளர் டி.ஆர்.பிராஜா எம்.எல்.ஏ மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த சிறப்புக்குழு ஹங்கேரி, ருமேனியா, போலந்து , ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்துவர உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி வரை 193 தமிழக மாணவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணிக்காக இந்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















