SASTRA University: சிக்கலில் சாஸ்த்ரா யுனிவர்சிட்டி! 28 கட்டிடங்களை இடிக்க உத்தரவு - அரசு நோட்டீஸ்!!
தஞ்சாவூரிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக்கத்திற்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பல்கலைக்கழங்கங்களில் ஒன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக்கம் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டடங்களை கட்டியுள்ளதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ”தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுமார் 31.37 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ளது. அந்த ஆக்கிரமிப்பில் சுமார் 28 கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளது. அந்தக் கட்டங்களை சாஸ்த்ரா நிர்வாகம் வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் இடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றி அந்த ஆக்கிரமிப்புகளை இடிக்கும்.
மேலும் படிக்க:வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சட்டென மாறும் வானிலை!!
அதற்கு ஏற்படும் செலவை மாவட்ட நிர்வாகம் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 1985ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு அரசு ஒரு நோட்டீஸை கொடுத்துள்ளது. அந்த நோட்டீஸை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிற்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நான்கு வாரங்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
எனினும் இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போதைய அரசு நில சீர்த்திருத்த இயக்குநர் ஜெய்ந்தி ஐஏஎஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு சாஸ்த்ரா பல்கலைக் கழக கட்டடங்களை ஆய்வு செய்து வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் இந்தக் கட்டடங்களை இடித்து தமிழ்நாடு அரசத்திடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரை தொடர்பான நோட்டீஸை தற்போது தமிழ்நாடு அரசு சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்