(Source: ECI | ABP NEWS)
TN Govt Funds Transport Dept: போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்... ஒரு வழியாக நிதி ஒதுக்கிய அரசு...
TN Govt Funds Transport Dept: 2023-ம ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பலனை வழங்க, தமிழ்நாடு அரசு ரூ.206 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
நிலுவையில் உள்ள போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பலன்களை வழங்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகியகால கடனாக ரூ.206 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
போக்குவரத்துத் துறைத் தலைவர் அரசுக்கு கோரிக்கை
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க, 206 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
போக்குவரத்துத்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணை
போக்குவரத்துத்துறையின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்துத்துறை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையில், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு பணப்பலன்களை வாங்கும் வகையில் WMA எனப்படும் குறுகியகால கடனாக, ரூ.206.63 கோடியை ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போக்குவரதுக் கழக மேலாண் இயக்குநர்கள், உரியவர்களுக்கு இந்த தொகையை வழங்குவதுடன், இந்த நிதியாண்டிற்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















