மேலும் அறிய

தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு : டி.ஜி.பி.யின் பொறுப்பும் கடமையும் என்ன தெரியுமா?

தமிழ்நாடு காவல்துறைக்கு தேவையான வருடாந்திர பட்ஜெட்-ஐ, டிஜிபி-யின் அனுமதி பெற்றுதான் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், இது நிதியாமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு காவல்துறை அதிகாரி நியமிக்கப்படுவதுண்டு. இவர், அம்மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் (Director General of Police) என்று அழைக்கப்படுகிறார். 

டிஜிபி நியனமம் இன்று வரை அரசியலமைப்பில் முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. ஏனெனில், காவல்துறை மாநில அலுவல் பட்டியலில் வருவதால் மாநில அரசுகள் மட்டுமே டிஜிபியை நியமனம் செய்ய இயலும் என்று அரசியலமைப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, கடந்த 2018ம் ஆண்டு மேற்கு வங்கம், கேரளா, பீகார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மாநில அரசுகள் காவல்துறை சட்ட விதிமுறைகளின் அடிப்படையில்  டிஜிபி  நியனமனம் நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) அனுப்பும் பட்டியல் அடிப்படையில் தான் நியமனம் நடைபெறும் என்று தீர்ப்பளித்தது.    

தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு : டி.ஜி.பி.யின் பொறுப்பும் கடமையும் என்ன தெரியுமா?    

பிரகாஷ் சிங் வழக்கு: 

1996-ல் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் பிரகாஷ் சிங், என்.கே. சிங் இருவரும் “காவல்துறை சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மாநில காவல்துரையின் தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும் பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாகவும் இருக்க வேண்டும். எல்லா உயர் அதிகாரிகளும், காவல் நிலைய அதிகாரிகளும் குறைந்தது இரு வருடம் பொறுப்பில் இருக்க வேண்டும் போன்ற முக்கிய உத்தரவுகளை 2006-ல் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும்,"சம்பந்தப்பட்ட மாநிலங்கள் டிஜிபி காலிப்பணியிடங்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு குறையாத அறிவிப்பை எழுத்து மூலமாக மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பணியாளர் தேர்வாணையம் மூன்று அதிகாரிகள் அடங்கிய பெயர் பட்டியலை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும். பெயர் பட்டியல் தயாரிக்கும்போது, பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாக இருக்க அதிகாரிகளை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தகுதி மற்றும் பணிமூப்பின் அடிப்படையில்  வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும்  இருக்கவேண்டும். தேர்வாணையம் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒருவரை மாநில டிஜிபி - ஆக மாநிலங்கள் உடனடியாக  நியமிக்க வேண்டும்" போன்ற வழிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.

தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு : டி.ஜி.பி.யின் பொறுப்பும் கடமையும் என்ன தெரியுமா?

  உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உதாரணமாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் 320- ன் கீழ், ' குடியியல் பணியங்கள் குடியியல் பணியிடைகள் ஆகியவற்றிற்கு ஆளெடுக்கும் முறைகள் தொடர்பான அனைத்து பொருட்பாடுகள் பற்றியும் அரசு பணியாளர் தேர்வாணையத்த்தை அல்லது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை கலந்தாய்வு செய்தல் வேண்டும்" என்று தெரிவிக்கிறது. இதில், கலந்தாய்வு என்பது வெறும் தகவல் பரிமாற்றம்தான் என்றும், மாநிலங்களை தேர்வாணையம் நிர்பந்திக்க முடியாது என்றும் வாதிட்டனர். இருப்பினும், இந்த வாதத்தை ஏற்கமறுத்த உச்சநீதிமன்றம், 'கலாந்தாய்வு' என்பது மாநிலங்கள் தன்னிச்சையாக செயல்படாத தன்மையை உணர்த்துவதாக தெரிவித்தனர்.               

டிஜிபி கடமையும் பொறுப்பும்:    

இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குநர் (ஆங்கில மொழி: Director General of Police) இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர்.  இருப்பினும், டீ.ஜீ.பி அம்மாநில அமைச்சர்களுக்கு  பதிலுரைப்பவராகவே  இருக்க வேண்டும். குடிமக்களின் பாதுகாப்பை, சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பது மாநிலங்களின் கடமையாகும். உண்மையாகவே, மாநில அரசுகள் தான் இந்த கடமைகளை காவல் துறைக்குக் கொடுத்துள்ளது. மேலும், காவல்துறையினர் நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்படுகின்றனர் என்பதை மக்களிடம் உறுதிப்படுத்தும் கடமை மாநில அரசுக்கு உண்டு. மேலும், காவல் துறைக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பணம் கொடுக்கப்படுகிறது. 

பொறுப்பு:   

தற்போது மாநிலத்தில் காவல் துறை, டிஜிபி தலைமையின்கீழ் இயங்கி வருகிறது. டிஜிபி தலைமயின் கீழ்,    மாநில காவல்துறை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு கண்காண்ப்பாளர் ( Zonal Inspector)தலைமையில் இயங்கி வருகிறது. மேலும், காவல் துறை 11 போலீஸ் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆய்வாளரின் (Inspectors General of Police) கீழ் இயங்கி வருகிறது. 

தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு : டி.ஜி.பி.யின் பொறுப்பும் கடமையும் என்ன தெரியுமா?

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் , திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது. தமிழகம் 38 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார். 

தமிழ்நாடு காவல்துறைக்கு தேவையான வருடாந்திர பட்ஜெட்-ஐ, டிஜிபி-யின் அனுமதி பெற்றுதான் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், இது நிதியாமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
Embed widget