மேலும் அறிய

TN Covid-19: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 105ஆக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றிலிருந்து 79 பேர் குணமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா:

சீனாவில் முதலில் பரவத் தொடங்கியதாக கூறப்படும் கொரோனா, உலகம் முழுவதும் பரவியது. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில், பயிற்சி ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒத்திகையில் சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா?  நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும். இந்தியாவில் முன்னதாக ஏற்பட்ட கொரோனா அலைகள், குறிப்பாக இரண்டாம் கொரோனா அலை, மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது.

மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் எல்லாம் நடந்தது.

முன்னெச்சரிக்கை:

இந்த பயற்சி ஒத்திகையில் நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுஷ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனரா ஆகியவையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. 

ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும். ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் கிட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் கோவிட் சோதனை திறன்களை அதிகரிப்பதையும் இந்த பயிற்சி ஒத்திகை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீண்டும் அதிகரிப்பு:

இந்நிலையில், பல மாதங்களாக தொற்றுகளின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வந்த நிலையில், தமிழ்நாட்டில், இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு தொற்றுக்கு 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, மக்கள் மீண்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100 எண்ணிக்கை தாண்டியுள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன், அரசு கூறும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
Embed widget