மேலும் அறிய

TN Budget 2021: திமுக அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் 13ல் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் குறித்தும், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Online Rummy Games: ஆன்லைன் ரம்மிக்கு தடை: வருகிறது புதிய சட்டம்! - அமைச்சர் தகவல்

அன்றைய தினத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றியது. இந்த பட்ஜெட்டின் போது, இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்து இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று பல குடும்பத்தார்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

 

 

பட்ஜெட் தொடர்பாக பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் கூட்டியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன்கீழ், 2021-2022-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 'நாள்' குறித்துள்ளார்கள். 2021-2022-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget