Annamalai: ”சிறுபான்மை என்றால் சிறுமை என்று அர்த்தம் இல்லை; அரசியல் புரிதல் இல்லை” - அண்ணாமலை அதிரடி!
என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
"சிறுபான்மையினர் என்றால் அதற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது. அரசியலமைப்பில் இருந்து இந்த அந்தஸ்தை எடுத்துவிடலாமா ?" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணத்தின் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களிடம் மத்தியில் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார்.
தமிழகத்தில் அரசியல் புரிதல் இல்லாமல் சிறுபான்மை குறித்து பேசுகின்றனர்..! சீமான் பேச்சு குறித்த கேள்விக்கு @annamalai_k பதில் !@SRajaJourno | @SeemanOfficial | @ntkwomenswing | @BJP4TamilNadu | @k_for_krish | @thirumaofficial | @SuVe4Madurai | @NammaTamilnadu_ | #BJP pic.twitter.com/hh5frqqQT4
— arunchinna (@arunreporter92) August 4, 2023
எங்கள் அருமை மோடிக்கு தெரியும். அண்ணாமலைக்கு தெரியாது, அண்ணாமலை just like என செல்லூர் ராஜூ பேசியுள்ளாரே !
யார் பேசினால், யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற தரம் இருக்கிறது. சிலர் தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்து கொண்டு பேசுகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்கள் நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். எங்களுக்கு எந்த தலைவர்களின் அப்ரூவலும் தேவையில்லை. மக்கள் அப்ரூவல் தான் தேவை, மக்கள் அன்பு தான் தேவை. எனவே அவர்களுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்