மேலும் அறிய

Annamalai: தமிழ்நாடு அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டுமானால் பெட்ரோல் வரியை குறைக்க வேண்டும்-அண்ணாமலை

பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பதிவு ஒன்றை செய்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான கலால் வரியை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை குறைத்தது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய் வரை குறைத்தது. அத்துடன் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை குறைத்தது.  மேலும் அந்த அறிவிப்பில் மாநிலங்கள் தங்களுடைய வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய நிதியமைச்சர் வைத்திருந்தார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார். 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில், “திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக தமிழ்நாட்டின் வாட் வரி மத்திய அரசின் கலால் வரியை விட மிகவும் அதிகமாக உள்ளது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையில் மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்கிறார் என்றால் அவர் இரண்டு விஷயங்களை உடனே செய்ய வேண்டும்.

 

முதலில் பெட்ரோல் மீதான வரியை 2 ரூபாயையும், டீசல் மீதான வரியை 4 ரூபாய் வரையும் குறைக்க வேண்டும். அத்துடன் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியான அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேலும் பெட்ரோல் மீதான வாட் வரியை விற்பனையாகும் விலையிலிருந்து சதவிகிதமாக கணக்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக இதுதொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோலின் விலையை சுமார் 23 ரூபாய் வரை (250%) உயர்த்தியுள்ளது. அதேபோல் டீசலின் விலையை சுமார் 29 ரூபாய் வரை(900%) உயர்த்தியுள்ளது. இந்த அளவிற்கு விலையை ஏற்றும் போது மாநிலங்களிடம் ஒரு தகவல் கூட சொல்லவில்லை. தற்போது அதில் 50% விலையை மட்டும் குறைந்துவிட்டு  மாநிலங்களை தங்களுடைய வரியை குறைக்க சொல்வது எப்படி நியாயம். இது தான் கூட்டாட்சி தத்துவமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget