மேலும் அறிய

'தேசிய கல்விக்கொள்கையை பிட் அடிக்கிறது தமிழக அரசு' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

புதிய கல்விக் கொள்கையில் பாடத்துடன் உணவு என்ற கருத்து உள்ளது. அதனை பிட் அடித்து காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது என்று ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நொய்யல் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளேன். நொய்யல் ஆறு சீர்கேடு நிறைந்திருப்பதாக அறிந்து கொண்டேன். தமிழகத்தில் உள்ள ஆறுகளை கழிவுகள் கலக்காமல் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

ஆளுநர் என்றால் துச்சம்:

அயல்நாட்டிலிருந்து வருகை தந்த உடனே பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் பேசி உள்ளார். இது போன்ற ஊக்கம்தான் சந்திராயன் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு சந்திராயன் தென் துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.

ஆளுநர் என்றாலே தமிழகத்தில் துச்சமாக பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் தரக்குறைவாக ஆளுநரை பேசுகிறார்கள். வேண்டுமென்றே அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சண்டைகளை முதல்வர் தான் முடித்து வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி ஆளுநர் உடன் முதல்வர் பேச வேண்டும். அதை விடுத்து விட்டு முரசொலியில் பேசுவது சரியானதாக இல்லை. 167 வது பிரிவை தமிழக அரசு பயன்படுத்தி ஆளுநரிடம் பேசலாம்.

தேசிய கல்விக்கொள்கையை பிட் அடிக்கிறது தமிழக அரசு' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

தரர

நீட் தேர்வினால் அதிகளவில் மருத்துவர்கள் உருவாகிறார்கள். அதில் வேண்டுமென்று அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் தான் இவ்வாறு பேசி வருகிறார்கள். கார்த்திக் சிதம்பரம் கூட நீட்டுக்கு ஆதரவாக தான் இருக்கிறார். ஏனென்றால் அவருடைய அம்மா தான் நீதிமன்றத்தில் நீட்டுக்காக போராடி, அதனை பெற்றுக் கொடுத்தார். நீட் தேர்வு குறித்து இன்னும் பேசி வருவது மாணவருக்கு செய்யும் துரோகம். புதிய கல்விக் கொள்கையில் பாடத்துடன் உணவு என்ற கருத்து உள்ளது. அதனை பிட் அடித்து காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடித்து மாநிலக் கல்விக் கொள்கையில் சேர்த்து வருகிறது தமிழக அரசு.

கச்சத்தீவில் இருந்து கல்வி வரை எல்லாம் தாரை வார்த்துவிட்டு, இப்போது கொண்டு வருகிறோம் என்று பேசி வருகிறார்கள். முரசொலியில் யோகி ஆதிநாத் குறித்து விமர்சனம் வந்திருக்கிறது. முதலில் தமிழ்நாடு நன்றாக உள்ளதா என பார்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஜாதி கலவரம், வேங்கை வயல் விவகாரம், உள்ளிட்டவை இன்றும் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் அவர் காலில் விழுந்ததால், யோகி ஆதித்தயநாத் அடுத்த பிரதமர் அவர் என நினைத்து இவ்வாறு செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்த பிரதமர் மோடி தான். பிரகாஷ்ராஜ் குறித்தெல்லாம் பேச கூடாது.

ஆளுநர்கள் வரவேற்பு என்பது ஒரு பாசிட்டிவ் அப்ரோச், கருப்புக் கொடி என்பதை நெகட்டிவ் அப்ரோச். ஆனால் பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. நெகடிவ் அப்பரோச்சிக்கு அனுமதி இருக்கிறது. ஆளுநர்கள் என்பது ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. நீங்கள் கொடுக்கும் மசோதாவை எல்லாம் உடனடியாக அனுப்புவதற்கு. மசோதாக்கள் தேக்கமடைகிறது என்றால், ஒரு கவர்னர் அந்த மசோதாவை கையில் வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதையெல்லாம் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.