Raj Gauthaman : தலித் எழுத்துக்களின் முன்னோடி... எழுத்தாளர் , ஆய்வாளர் ராஜ்கெளதமன் காலமானார்...
தமிழில் தலித் தலித் தன்வரலாறு நாவல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவர் ராஜ்கெளதமன் இன்று நவம்பர் 13 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்
எழுத்தாளர் ராஜ்கெளதமன்
இந்திய இலக்கியங்களில் தன் வரலாற்று நாவல்களுக்கு எப்போதும் ஒரு தனித்த இடம் இருந்திருக்கிறது. ஆனால் இந்த தன்வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தங்கள் பார்வையில் எழுதப்பட்டவை. தலித் இலக்கியம் என்கிற ஒரு இலக்கிய பிரிவு இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் பல வருடங்கள் கழித்தே அங்கீகாரம் பெற்ற்து. மராட்டிய எழுத்தாளரான தயா பவார் 1978 ஆம் ஆண்டு பலூட்டா என்கிற முதல் தலித் தன்வரலாற்றை நாவலை எழுதினார். இதனைத் தொடர்ந்து 1990களுக்கு மேல் தமிழில் தலித் தன்வரலாறு நாவல்கள் எழுதப்பட்டன. எழுத்தாளர் பாமா எழுதிய கருக்கு நாவல் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு எழுத்தாளர் ராஜ் கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திடம் தலித் தன்வரலாற்று நாவல்களில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
சிலுவை ராஜ் சரித்திரம்
விருதுநகர் மாவட்டத்தில் புதுப்பட்டியில் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பிறந்தார் ராஜ்கெளதமன். இவரது இயற்பெயர் எஸ் புஷ்பராஜ். மதுரையில் மேல்நிலை பள்ளியை முடித்து பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் விலங்கியலில் பட்டம்பெற்றார். பின் அடுத்தடுத்து தமிழில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார். புதுச்சேரியில் காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். பின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமை பேராசிரியராக பணிபுரிந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சிலுவைராஜ் சரித்திரம் , லண்டனில் சிலுவை ராஜ் , காலச்சுமை ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசுப்பணிகளில் ஏதிர்கொள்ளும் ஒருக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் ஒரு தனி மனித பார்வையில் இருந்து இந்த புத்தகங்களில் பேசினார். சிலுவை ராஜ் என்கிற ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த மனிதன் சிறு வயதில் இருந்து தனது வாழ்க்கையின் பெரும்பங்கும் தனது சாதியால் புறக்கணிக்கப்படுவதை உலகத்திற்கு காட்டினார் ராஜ்கெளதம். இவற்றை பச்சாதாபத்தை கோரும் வகையில்லாமல் பகடியாக அவர் சொல்லியவிதமே இந்த படைப்புகளை தனித்துவமாக மாற்றியது.
நாவல் மட்டுமில்லாமல் பண்பாட்டு ஆய்வுகளத்தில் பெரும்பங்காற்றியவர் ராஜ்கெளதமன். ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் , எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் , க. அயோத்திதாசர் ஆய்வுகள் கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக கதாகொஸ: சமணக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இது தவிர்த்து எரிக் ஃப்ராம் எழுதிய மனவளமான சமூதாயம் , அன்பு எனும் கலை உள்ளிட்ட நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
கடந்த சில காலமாக உடல்நல குன்றி இருந்த ராஜ்கெளதம் இன்று தனது 74 ஆவது வயதில் காலமானார்.