TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. வெளுக்கப்போது கனமழை - தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எங்கு பெய்யும்?
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை பெய்ய உள்ளது என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் தற்போது தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இன்று எங்கெல்லாம் மழை?
இந்த நிலையில், அடுத்த 3 நாட்கள் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 21 மாவட்டங்கள்:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 17, 2025
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 21 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாளான 19ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மழையால் எப்போதும் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் கடலூரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் முன்னேற்பாடுகளாக டிராக்டர்களை மாநில அரசும், மாநகராட்சியும் தயார்நிலையில் இறக்கியுள்ளது. மேலும், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், ஏரிகள் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல் போன்ற பணிகளிலும் அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மேலும், வெள்ளம் உருவாகும் பகுதிகளிலும், கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பணிகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.






















