![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
![TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா? tamil nadu weather forecast Chances of Moderate rain for 5 days in TN TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/4ec5fa13e4499e0dc0cb81969f78e3dc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் முற்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 16 வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 12.12.2021. 13.12.2021 14.12.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15.12.2021, 16.12.2021 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை. 25 டிகிரி செல்யெஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
செய்யார் (திருவண்ணாமலை) 7, மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 6, காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 5, திருமானுர் (அரியலூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 4, கொள்ளிடம் (மயிலாடுதுறை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அரிமலம் (புதுக்கோட்டை), ஜெயம்கொண்டாம் (அரியலூர் ), சீர்காழி (மயிலாடுதுறை), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 3, ஆரணி (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, திருவையாறு (தஞ்சாவூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்) நாகப்பட்டினம், குன்னூர் (நீலகிரி), கரம்பக்குடி (புதுக்கோட்டை) தலா 2, சென்னை விமான நிலையம் வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சிவகாசி (விருதுநகர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) December 12, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)