Weather Update: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனி,தென்காசி, தூத்துக்குடி,ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி,தென்காசி, தூத்துக்குடி,ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வருகிற 5 ம் தேதி முதல் மாநிலமெங்கும் மழை குறைந்து வறண்ட கால நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் வளைமுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஓட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, தென்காசி, ராமநாதபுரம். மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை; காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இமோனது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
#WeatherUpdate pic.twitter.com/YNnsVMUz5w
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) January 2, 2022
அதேபோல், நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் 5 மற்றும் 6 ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாதும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 43 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செய்தியை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WeatherUpdate pic.twitter.com/EMAGEVjl4E
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) January 2, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்