மேலும் அறிய

TN Urban Local Body Election 2022: டாப் கியரில் செல்லும் நாமக்கல்.. மெல்ல நகரும் சென்னை.. 1 மணி நிலவரம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டிலேயே மதியம் 1 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு பதிவானது.

தமிழ்நாட்டிலேயே மதியம் 1 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிரப் பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

TN Urban Local Body Election 2022: டாப் கியரில் செல்லும் நாமக்கல்.. மெல்ல நகரும் சென்னை.. 1 மணி நிலவரம் சொல்வது என்ன?

இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி, 21.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

1 மணி நிலவரப்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41.09% வாக்குகளும் திருச்சியில் 42% வாக்குகளும் பதிவாகின. விழுப்புரத்தில் 47.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

புதுக்கோட்டையில் 44.26% வாக்குகளும் மயிலாடுதுறையில் 39% வாக்குகளும் பதிவாகின. திருவண்ணாமலையில் 41%, ராமநாதபுரத்தில் 46.84%, கன்னியாகுமரியில் 36.74%, பெரம்பலூரில் 43.8% பதிவானது. 

திருவாரூர் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 43.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டில் 30.23%, சேலத்தில் 43.12%, சிவகங்கையில் 39.69 % வாக்குகள் பதிவாகின. தேனியில் 44.94 % வாக்குகளும், 44.34  அரியலூரில் 49.44 % வாக்குகளும் பதிவாகின. 

தூத்துக்குடியில் 33.55 % வாக்குகள் பதிவாகின. அதேபோலத் தென்காசியில் 46%, கள்ளக்குறிச்சி 42.02% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக  நாமக்கல் மாவட்டத்தில் 54.95 வாக்குகள் பதிவாகின. கரூர் மாவட்டத்தில் இன்று 1 மணி நிலவரத்தின்படி வாக்கு சதவீதம் 50.04 ஆக உள்ளது.  சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு, மதியம் 1 மணி நிலவரப்படி 23.42  சதவீதம் வாக்குகள் பதிவாகின. சென்னையில் தொடர்ந்து வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் அவசியம் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரி  ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget