கரூரில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல் திறந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் பள்ளப்பட்டி பகுயில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
450 ஆண்டுகளாக வரலாற்று சின்னமாக இருந்த பாபரி மஸ்ஜித் டிசம்பர் 6 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது
அந்தநாளை பயங்கரவாதம் எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடைப்பிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன உரையில் கோவை உமர் ஹாஜியார் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர், நகரத் தலைவர் பிர்கலாம் அபுதாஹீர், மற்றும் பள்ளப்பட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த உமர் ஹாஜியார் கூறுகையில், 1991 நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்தி வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல் திறந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.