Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
WTC 2021 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸுக்குப் பின்னால் இருக்கும் கதை தெரியுமா?
WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு..!
12வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட உள்ளது.
CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்,மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,84,91,670 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
வரும் 23ம் தேதிக்குள் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் சமர்பிக்கலாம் என நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் கருத்துக்கள் அனுப்பி வைக்கலாம்.
NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு
மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கான மருந்து கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 62,000-மாக இருந்த ஆம்போடெரிசின் பி லிபோசோமல் ஊசியின் உற்பத்தி, மே மாதத்தில் 1.63 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 3.75 குப்பிகளாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை உற்பத்தியாளர்கள் குறைக்காவிட்டால், அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.