இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் - இன்றைய முக்கியச் செய்திகள் என்னென்ன?
புதிய கட்டுப்பாடுகளின்படி, திரையரங்குகள், வணிகவளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், இறுதி ஊர்வலத்தில் 25 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பினை இங்கே கான்போம்.
1. நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்களை கொண்டு வரும் சரக்கு கப்பல்களுக்கு காமராஜர் துறைமுகம் உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களும், கப்பல்களுக்கான கட்டணம், சேமிப்பு கிடங்கு கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு நெருக்கடியில் இருக்கும் இந்தியாவுக்கு உதவ பிரிட்டன் முன்வந்திருக்கிறது. இதன்படி முதற்கட்டமாக இந்தியாவுக்கு 600 மருத்துவக் கருவிகள் அனுப்பப்படும் என அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அவை வருகின்ற செவ்வாய் அன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேரும்.
3. பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
4. பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மூலம் நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 551 பிஎஸ்ஏ பிராண வாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன
5. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கோவிட் 19-தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தை விட குறைவாக உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
6. கோவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
7.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டுப்பாடுகளின்படி, திரையரங்குகள், வணிகவளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், இறுதி ஊர்வலத்தில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
8. தமிழகத்தில் இன்று முதல் வரும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் - தமிழ்நாடு தெரிவித்தது.
10. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. பின்னர், நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றிபெற்றது.