மேலும் அறிய

தவறான, அதிகமான யூனிட் கணக்கீடு; மாதந்தோறும் மின் கட்டண வசூல் செய்ய வலியுறுத்தல்

மின் கட்டண வசூல் முறையை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது- ராமதாஸ்.

மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் தற்போது வீட்டு மின்சார நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தாலும், தற்போதைய பொருளாதார சூழல், மக்களின் வாழ்வியல் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு மின் கட்டண வசூல் முறையை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முழுப் பயனும் பொதுமக்களை சென்றடைய வேண்டுமெனில், மின் கணக்கெடுப்பு மற்றும் கட்டண வசூல் முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதையும் வாசிக்கலாம்: Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

பொருளாதார சுமை

தற்போதைய இரு மாத கட்டண முறையால் ஒரே நேரத்தில் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு இது பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படும் போது குறைந்த தொகையை எளிதாக செலுத்த முடியும். இதனால் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அபராதங்களும் குறையும்.

மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மீட்டர் கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தவறான கணக்கெடுப்பு, அதிகப்படியான யூனிட் பதிவு, சராசரி கணக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாதந்தோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க முடியும். தவறுகள் குறைவதோடு, நுகர்வோரும் தங்களது மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

மாதந்தோறும் வசூல்

இன்றைய சூழலில் குடிநீர், தொலைபேசி, இணையம், கேஸ், வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாதந்தோறும் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல் மின்சார கட்டணத்தையும் மாதாந்திர அடிப்படையில் மாற்றுவது நிர்வாக ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமானதாகும். தமிழக மின்வாரியத்தில் டிஜிட்டல் மீட்டர்கள், ஆன்லைன் கட்டண வசதிகள் மற்றும் செயலி மூலமான சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர கட்டண முறையை அமல்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது.

மாதாந்திர மின் கட்டண முறையால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:

* பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

* குடும்பங்களின் மாதாந்திர நிதி திட்டமிடல் எளிதாகும்.

* மின் பயன்பாட்டை கண்காணித்து சிக்கனமாக பயன்படுத்த மக்கள் ஊக்கமடைவார்கள்.

* மீட்டர் கணக்கெடுப்பில் ஏற்படும் தவறுகள் குறையும்.

* மின்வாரியத்தின் வருவாய் வசூல் சீராக நடைபெறும்.

* நிலுவைத் தொகை மற்றும் அபராதம் செலுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை குறையும்.

* 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் பயன் தெளிவாக கணக்கிடப்படும்.

எனவே, தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மின்வாரிய நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாகவும் மக்கள் நட்பாகவும் மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு உடனடியாக மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்’’ என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கோயிலுக்குள் ஷூ.. கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்கணும்.. அமைச்சர் ரமேஷ் பதிலடி!
கோயிலுக்குள் ஷூ.. கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்கணும்.. அமைச்சர் ரமேஷ் பதிலடி!
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
Embed widget