TN Rain Alert: தமிழ்நாட்டில், 11 மாவட்டங்களில் மழை இருக்குமாம்.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
29.08.2023 முதல் 02.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலையில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பதிவானது. சோழிங்கநல்ல்லூர், நாவலூர், திருவான்மியூர், அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம், மேடவாக்கம், ஆலந்தூர், கிண்டி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் இயல்பான வானிலையே சென்னையில் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மழை இருந்தாலும் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து மதுரையில் 38.8 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு (மில்லிமீட்டரில்):
கடலூர் 19.0, திருப்பத்தூர் 7.0, வேலூர் 4.0, புதுச்சேரி விமான நிலையம் 3.0, திருத்தணி (திருவள்ளூர்) 0.6, விருத்தாசலம் (கடலூர்) 11.5,பாப்பாரப்பட்டி (தர்மபுரி) 10.5, சிதம்பரம் (கடலூர்) 3.0, மாதவரம் (சென்னை) 1.0, திரூர் (திருவள்ளூர்) 0.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.