தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாடு முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், "ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண / தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது.
இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். எனவே. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகள் (Ballot Boxes) தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக வாக்குப்பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து அவைகளின் தன்மையினை ஆராய்ந்து அதாவது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பறந்த கடிதம்:
சிறிதளவு பழுதடைந்து அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவிற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை. முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை வைத்துக்கொள்ள வேண்டும்.
67607 வகை பிரித்து வாக்குப்பெட்டிகளில் உள்ள சிறு பழுதுகளை சரிசெய்வதற்கும் மற்றும் சுத்தம் செய்து எண்ணெயிடும் பணிக்கு செலவு மதிப்பீடு, வாக்குப் பெட்டி ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.20- (ரூபாய் இருபத்தி ஒன்று மட்டும்) பார்வையில் காணும் கடிதத்தில் பொதுபணித் துறை பரிந்துரைத்துள்ளவாறு அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை கீழ்க்காணும் அறிவுரைகளின்படி எதிர்வரும் தேர்தலுக்கு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால், அது தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: TVK Vijay : நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?