TN Headlines Today: நாளை மழைக்கு வாய்ப்பு.. என்.ஐ.ஏ திடீர் சோதனை.. தமிழ்நாட்டில் இன்றைய முக்கிய செய்திகள்..
TN Headlines Today Sep, 16: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
என்.ஐ.ஏ சோதனை
கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அதில் தொடர்புடையவர்கள், படித்தவர்களுடைய வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.மேலும் வாசிக்க..
ஒரே நாடு ஒரே தேர்தல் - தி.மு.க. எதிர்க்க அறிவுறுத்தல்
வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் திமுக தரப்பில் முன்வைக்கப்படும் விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்தால் இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களிக்க திமுக எம்பிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வாசிக்க..
இன்றும் நாளையும் கொட்டப்போகும் மழை
காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
தமிழ்நாட்டில் பாதிக்கும் குறைவான பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படுவதாகவும், அனைத்து பெண்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ”ஏய்த்துப் பிழைக்கும் தொழிலையும், மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தும் வித்தையையும், கைவந்த கலையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆளும் திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசும், காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக் கிடப்பார்கள் என்ற மமதையில் மிதந்து வருகிறது.மேலும் வாசிக்க..
தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீர்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்.மேலும் வாசிக்க..
புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் வாசிக்க..
உரிமைத்தொகையால் மலரும் மகளிர் வாழ்க்கை!
பற்பல மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வாசிக்க..
டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் மாற்றம்..
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். கடந்த மாதம் 31 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி -இன் புதிய தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க..