TN Headlines Today: இன்றைய நாளில் என்னெல்லாம் நடந்தது? 3 மணி முக்கியச் செய்திகள் ரவுண்டப் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை இங்கே காணலாம்.
TN Headlines Today:
- சிறிய ஜவுளிப் பூங்கா (Mini Textile Park)
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.மேலும் வாசிக்க..
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 38% ல் இருந்து 42% ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஏப்.1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு. அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.மேலும் வாசிக்க..
-
விஷச் சாராயம் உயிரிழப்பு விவகாரம்: பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தில் மெத்தனால் அருந்தி 14 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி திமுக 20 வார்டு கவுன்சிலரும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீவிர ஆதரவாளரும் ரம்யாவின் கணவர் மரூர் ராஜா கடந்த மாதம் பதினெட்டாம் தேதி அன்று மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரால் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டு 105 லிட்டர் எரி சாராயம், கார் மற்றும் சாராயம் டேக்ஸ் செய்யும் மிஷின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.மேலும் வாசிக்க..
-
Government Order: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் ஆஃபர்: சத்துணவில் சர்க்கரை பொங்கல் - அரசாணை வெளியீடு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாட வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.மேலும் வாசிக்க..
- கணவன் மற்றும் மனைவி ஆட்சியர்
- TN Rain Alert: ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கனமழை.. என்னதான் நடக்குது? இன்றைய வானிலை நிலவரம் இதுதான்..
17.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.05.2023 முதல் 21.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் வாசிக்க