TN Headlines Today June 30: டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்....ஜூலை 3ல் பேனா நினைவு சின்னம் வழக்கு விசாரணை...தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
TN Headlines Today June 30: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Headlines Today June 30:
New DGP Swearing: புதிய சட்ட - ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்.. கொடுத்த முதல் வாக்குறுதி இதுதான்..!
தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, அதற்கான ஆவணங்களை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். மயிலாப்பூர் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பொறுபேற்ரார் சங்கர் ஜிவாலுக்கு, மூத்த காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/shankar-jiwal-sworned-as-tamilnadus-new-dgp-over-sylendra-babu-126107
TN Rain Alert: வரும் 2, 3, 4 ஆம் தேதி செம்ம மழை இருக்கு.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் - இதோ அப்டேட்...!
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30.06.2023 மற்றும் 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-to-occur-in-tamil-nadu-on-2nd-3rd-and-4th-according-to-the-meteorological-department-126064
Pen Monument: பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; ஜூலை 3ஆம் தேதி விசாரணை