TN Headlines Today June 25: தமிழ்நாட்டில் நடந்தது என்ன? இன்றைய முக்கியச் செய்திகள் ரவுண்டப்!
TN Headlines Today June 23: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
VP Singh: சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை - முதலமைச்சர் அறிவிப்பு
நாட்டின் முன்னாள் பிரதமரான வி.பி.சிங்கிற்கு இன்று பிறந்தநாள் ஆகும். இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த வி.பி.சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் முன்னாள் பிரதமரான வி.பி.சிங்கிற்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,”பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-cm-mk-stalin-announced-statue-in-chennai-presidency-college-for-former-prime-minister-vp-singh-125144
TN CM Award: காவல் துறையினருக்கான முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு - யார்? யாருக்கு?
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல்ர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்-க்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 5 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/international-day-against-drug-abuse-and-illicit-trafficking-tamil-nadu-chief-minister-award-to-tn-police-125125
Weather Update: 'மீனவர்களே.. சூறைக்காற்று வீசும் அபாயம்; 29ம் தேதி வரை கடலுக்கு போகாதீங்க..' - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25.06.2023 மற்றும் 26.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.06.2023 முதல் 29.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/fishermen-dont-go-for-fishing-untill-29th-and-several-area-will-get-rain-for-next-5-days-imd-report-125133
Minister E. V. Velu: மருத்துவர்களுக்கு உதவிட செவிலியர்களை நியமனம் செய்தவரே கலைஞர்தான்... அமைச்சர் எ.வ.வேலு பேச்சு..!
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/vellore/minister-e-v-velu-said-that-the-tamil-nadu-government-is-implementing-medical-schemes-as-if-the-people-live-well-then-the-country-will-be-well-125101
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய வேத பாடசாலை மாணவர்கள்.. பொறுப்பாளரின் அலட்சியமே காரணம் என நீதிபதி கருத்து !
திருச்சி ஸ்ரீமன் டிரஸ்ட் பட்டர் வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கு, வேதச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவின் கவன குறைவு அலட்சியம் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது - நீதிபதி கருத்து. இவரின் காவல் துறையின் விசாரணை முக்கியம் என்பதால் இவருக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நிறுவனர் பத்ரி நாராயணனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியும் உத்தரவு. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/madurai/judge-opined-that-vedic-school-students-drowned-in-kollidam-river-due-to-the-negligence-of-the-in-charge-of-the-vedic-school-125116