Ayodhya Ram Temple rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் தேங்குவதாகவும், வெளியேறுவதற்கு முறையான அமைப்பு இல்லை எனவும் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் திரண்டு வருகின்றனர். இந்தநிலையில் உத்ரபிரதேசத்தில் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கன மழை காரணமாக கருவரையில் உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் அர்ச்சகர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்படி நடக்கும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முதலில் ஸ்ரீ பாலராமர் சிலை இருக்கும் கருவறையின் மேற்கூறையில் நீர் ஒழுகியது. இது மிகவும் முக்கியமான ஒன்று. நீர் வெளியேறுவதற்கு வழியேயில்லை. கனமழையால் பக்தர்கள் வந்து செல்லவம் கடிணமான சூழல் உள்ளது. இதில் முழு கவணம் செலுத்தி உடணடி தீர்வைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளர்.
இது குறித்து பேசிய அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழு தலைவர் குரு மண்டம் வானத்தை நோக்கியவாறு உள்ளது. அதே சமயம் முதல் தளத்தில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு சிறிது நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் வேலைகள் முடிந்ததும் அந்த வழித்தடம் மூடப்படும். கோயில் கட்டுமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. கட்டுமானத்தில் உள்ள மண்டபங்கள் திறந்திருக்கும்போது மழை உள்ளே வர வாய்ப்புகள் உள்ளது" என்றார்.