Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் இன்று இரவு 9 மணி அளவில் பல்வேறு இடங்களில் மழையானது பெய்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையில் திடீரென இன்று இரவு மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
குறிப்பாக ஆயிரம் விளக்கு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள், வீட்டிற்கு திரும்புவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை:
தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 7 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் செய்யூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2024-06-25-20:23:18 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/QAshiJ2eWP
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 25, 2024